தாரமங்கலத்தில்பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


தாரமங்கலத்தில்பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x

தாரமங்கலத்தில் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

சேலம்

தாரமங்கலம்,

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த தேர்த்திருவிழாவானது, நான்கு கோடி மகாஜனங்கள், மிராசுதாரர்கள், கட்டளைதாரர்களின் ஒத்துழைப்போடு பெரியாம்பட்டி, சிக்கம்பட்டி, பொத்தியாம்பட்டி, கருக்கப்பட்டி நாடார் சமுதாய கட்டளைதாரர்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது,

இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, தேரில் எழுந்தருளிய பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தேர்நிலையம் அருகே பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது சுவாமிக்கு பூஜைகள் செய்து தீப ஆராதனை செய்து பம்பை மேளம், அதிர்வேட்டு முழங்க, மாடு ஆட்டம், ஒயிலாட்டத்துடன் இருபுறமும் குவிந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டு இறுதியாக தேர் நிலைக்கு வந்தடைந்தது. இந்த விழாவில் கோவில் தக்கார் திருஞானசம்பந்தர், கோவில் செயல் அலுவலர் புனிதராஜ், உமாபதி, திருஞானம் குருசாமி, பத்ரகாளியம்மன் கோவில் திருப்பணி கமிட்டியை சேர்ந்த கந்தசாமி, செல்லப்பன், நாடார் பேரவை மாநில அமைப்பு செயலாளர் தாரை மணியன், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், எடப்பாடி ஒன்றியக்குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ், கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், துரை என்ற மாதேஷ்வரன், துட்டம்பட்டி செங்கோடன், பழனிசாமி, சிலம்பரசன், தேர் கமிட்டி நிர்வாகிகள், நான்குகோடி மகாஜனங்கள், மிராசுதாரர்கள், கட்டளைதாரர்கள், நாடார் சமூகத்தார்கள், பத்ரகாளியம்மன் தேர் கட்டளைதாரர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story