பகவதி அம்மன் கோவில் திருவிழா
பந்தலூர் அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. அதிகாலை 4 மணிக்கு குளக்கரையில் இருந்து பகவதி அம்மன், தேவன், குளிகன் ஆயிரவல்லி அம்மன் ஆகியோர் குடிஅழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மலையாள பாரம்பரிய முறைப்படி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு செண்டை மேளம் முழங்க அம்மன் அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய வாத்தியங்களை இசைத்து நடனமாடி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story