பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா


பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா
தினத்தந்தி 28 April 2023 12:01 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே செம்படாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 4 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து முதல் நாள் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 2-ம் நாள் மாலையில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். 3-ம் நாள் காலையில் திரளான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 4-ம் நாள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story