பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்


பகவதி அம்மன் கோவிலில்   நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு நேற்று நடிகர் யோகிபாபு வந்தார். அவர் அம்மனுக்கு பட்டுச்சேலை வழங்கி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் அங்குள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் யோகி பாபு கோவிலுக்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் நடிகர் யோகி பாபுவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கவே கூட்ட நெரிசலில் சிக்கிய யோகிபாபு சிரமப்பட்டு காருக்கு வந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உவரியில் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் காரில் கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story