பைரவர் கோவில் குடமுழுக்கு பணிகள் தொடக்கம்
தகட்டூர் பைரவர் கோவில் குடமுழுக்கு பணிகள் தொடங்கியது
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். சிறப்புமிக்க இக்கோவிலில் குடமுழுக்கு வருகிற 17-ந்தேதி நடக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை உள்ளிட்ட குடமுழுக்கு பணிகள் நேற்று காலை தொடங்கியது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கவியரசு, எழுத்தர் அன்புகார்த்தி, கோவில் அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார், ராதாகிருஷ்ணன் சாமிகள் உள்ளிட்ட மருளாளிகள் மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜைகள் தொடக்க நிகழ்ச்சி வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது.
Related Tags :
Next Story