வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் 500 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி


வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் 500 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 Jan 2023 11:01 PM IST (Updated: 8 Jan 2023 11:02 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் 500 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி

தேனி ஸ்ரீலட்சுமி நாட்டியாலயா, ஸ்ரீ ஆனந்த நாட்டியாலயா ஆகிய அமைப்புகள் சார்பில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி பரதநாட்டிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். உலக சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 500 மாணவிகள் கலந்துகொண்டு நாட்டிய அரங்கேற்றம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் போடி ஜமீன்தார் வடமலை முத்து ராஜபாண்டியன், தேனி அல்லிநகரம் வடக்கு நகர அ.தி.மு. செயலாளர் ரங்கநாதன், நகர துணைச்செயலாளர் மு.மயில்வேல், நகர பொருளாளர் பாண்டியராஜன், தேனி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் தேனி முருகேசன், தேனி நகர செயலாளர் வைகை கருப்பு, போடி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகணபதி, டாக்டர் சீனி பாண்டியன், ஆடிட்டர் லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டிய நடன ஆசிரியைகள் ராஜலட்சுமி, ஐடா பேபி ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story