ஆதிகால மனிதனின் தகவல் தொடர்பு குறித்த பரதநாட்டிய நிகழ்ச்சி
ஆதிகால மனிதனின் தகவல் தொடர்பு குறித்த பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர்
கொரடாச்சேரி அருகே அம்மையப்பனில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பரதநாட்டிய அசைவுகள் மூலம் ஆதிகால மனிதனின் தகவல் தொடர்பு குறித்த திறன் விளக்கம் மற்றும் நோபல் புத்தக சாதனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஆதிகாலம் முதல் நிகழ்காலம் வரை உள்ள அனைத்து தகவல் தொடர்பு திறன்கள் தொடர்பாக பரதநாட்டிய சைகைகள், முகபாவனைகள் மூலம் செயல் விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பயிற்சியாளர் காசிராமன் மற்றும் அவருடைய மாணவ, மாணவிகள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் சிநேகா ராஜசேகரன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஆங்கில பேராசிரியை சசிரேகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story