பாரதீய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நெல்லை சந்திப்பில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பில் பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், பொருளாதார மேம்பாட்டை மையமாக கொண்டு தேசிய தொழிலாளர் கொள்கையை வகுக்க வேண்டும். நிரந்தர வேலைக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமனம் செய்யக்கூடாது. குறைந்தபட்ச ஊதியத்துக்கு பதிலாக வாழ்வியல் தேவை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் கிரிஜா தலைமை தாங்கினார். ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகி முருகன் முன்னிலை வகித்தார். இதில் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வம், கட்டுமான சங்கம் மாவட்ட தலைவர் வரதன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story