மேலநாகையில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆங்கிலேயரிடம் பிடிபடாமல் இருக்க அடைக்கலம் தந்த மேலநாகை கிராமத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்கிலேயரிடம் பிடிபடாமல் இருக்க அடைக்கலம் தந்த மேலநாகை கிராமத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலநாகை
ஆங்கிலேயனின் பிடியில் இருந்து பாரத நாட்டை விடுவிக்க நடந்த விடுதலை போராட்டங்களில் பங்கேற்று மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டி வளர்த்தவர் பாரதியார். அகிம்சை வழியில் போராடினாலும் பாரதியாரை கைது செய்ய ஆங்கிலேயே அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
ஆங்கிலேயரிடம் பிடிபடாமல் இருக்க பாரதியார், பல்வேறு இடங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி உள்ளார். அவர் வசித்த இடங்கள் அனைத்தும் பாரதியாரின் நினைவிடங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலநாகை கிராமமும் பாரதியாரின் நினைவிடமாக திகழ்கிறது.
மாறுபட்ட தோற்றம்
கடந்த 1918-ம் ஆண்டு பாரதியார் தனது தனித்துவமான அடையாளமாக இருந்து வந்த முண்டாசு அணியாமலும், மீசையை மழித்தும் மாறுபட்ட தோற்றத்தில் மேல நாகை கிராமத்தில் வலம் வந்துள்ளார்.
பாரதியாரை ஆங்கிலேயர் கைது செய்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் ரகசியமாக அடைக்கலம் தந்து வரலாற்றில் இடம் பிடித்த மேலநாகை கிராமத்தில் அமைந்துள்ள பாரதியார் நினைவிடத்தில் நேற்று அவருடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது அங்கு உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டனர்.