பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.30 அடியாக உயர்வு


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.30 அடியாக உயர்வு
x

பவானிசாகர் அணை

ஈரோடு

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும், தமிழகத்தின் 2-வது பெரிய அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை ஆகும். அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,218 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 102.10 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று மதியம் 2 மணிக்கு அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 758 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 102.30 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் மட்டும் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story