பவானி நகராட்சி சாதாரண கூட்டம்27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
27 தீர்மானங்கள்
ஈரோடு
பவானி நகராட்சி சாதாரணக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் பவானி நகராட்சி நகர மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும். அதன்படி நேற்று நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கினார். தலைமை பொறியாளர் கதிர்வேலு முன்னிலை வகித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பெரும்பாலான நகராட்சி உறுப்பினர்கள் பிரசாரத்துக்கு சென்று விட்டனர். இதனால் 9 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் செல்லாண்டியம்மன் கோவில் மாசி திருவிழா பண்டிகையின் போது பவானி நகர எல்லை பகுதிகளில் தேவையான சுற்றுப்புற சுகாதார வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story