ரூ.42 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமிபூஜை


ரூ.42 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமிபூஜை
x

வாய்மேட்டில் ரூ.42 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமிபூஜை நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் வேதரத்தினம் வரவேற்றார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், ஒப்பந்தக்காரர்கள் அமுதன், பசுபதி பாலமுருகன், சிவகார்த்திகேயன், பாலாஜி, என்ஜினீயர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.


Next Story