புவனேஷ்வர்-ராமேசுவரம் வாராந்திர ரெயில் திருச்சிக்கு வரும் நேரம் மாற்றம்
புவனேஷ்வர்-ராமேசுவரம் வாராந்திர ரெயில் திருச்சிக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் 20896 திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்தரெயில் வருகிற 4-ந் தேதி முதல் ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு வந்து 4.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். வண்டி எண் 06251 மைசூரு-மயிலாடுதுறை இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் வருகிற 4, 11, 18 ஆகிய தேதிகளான வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாளான சனிக்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்து சேரும். இதேபோல் எதிர்மார்க்கத்தில் இந்த ரெயில் வண்டி எண் 06252 மயிலாடுதுறையில் இருந்து இன்று (சனிக்கிழமை), வருகிற 5, 12, 19 ஆகிய தேதிகளான சனிக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த தகவலை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.