வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் சேதமடைந்ததால் தனியார் கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் பெற்றோர்கள் கோரிக்கை அளித்தனர்.
அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி செயலர் மகேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.