ரூ.30¼ லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
ரூ.30¼ லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜையை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சி, நெல்லூர்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.30 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, துணைத்தலைவர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, ஒப்பந்ததாரர் மூர்த்தி, பேரூராட்சி உறுப்பினர்கள் சாரதி, செந்தமிழ் செல்வன், சகிலா விநாயகமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story