புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை


புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை
x

புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட நாரணாபுரம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள லட்சுமியாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு போதிய கட்டிடம் இல்லை. தற்போது அந்த பள்ளி அதே பகுதியில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு ஆய்வுக்கு வந்த அசோகன் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற அசோகன் எம்.எல்.ஏ. புதிய பள்ளி கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்தார். இந்தநிலையில் நாரணாபுரம், லட்சுமியாபுரம், நடையனேரி, அதிவீரன்பட்டி, வாடியூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ.31 லட்சம் செலவில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமிபூஜை லட்சுமியாபுரத்தில் நடைபெற்றது. இதில் அசோகன் எம்.எல்.ஏ., சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், பஞ்சாயத்து தலைவர் தேவராஜன், துணைத்தலைவர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி கண்ணன், வார்டு உறுப்பினர் வரலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமமூர்த்தி, என்ஜினீயர்கள் முகமது கரீப்மதார், மாலதி, காளிராஜ், தர்மர், காங்கிரஸ் பிரமுகர் சேர்மதுரை, வட்டாரத்தலைவர் முருகன், தவசிகுமார், முத்துமணி, பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story