குளங்களை ஆழப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை
சிவகிரி வட்டார பகுதியில் குளங்களை ஆழப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
சிவகிரி:
அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் பகுதியில் உள்ள தென்மலை, உள்ளார் தளவாய்புரம், திருமலாபுரம் என்ற அருளாட்சி, சுப்பிரமணியபுரம் ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த குளங்களை ஆழப்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி குளங்களை ஆழப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.