வேட்டங்குடி ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை


வேட்டங்குடி ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது.

சாலை அமைக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள தெற்கு தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். வேம்படி கிராமத்திலிருந்து தெற்கு தெருவுக்கு செல்வதற்கு இதுவரை சாலை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அங்கு செல்ல அப்பகுதி மக்கள் 600 மீட்டர் தூரம் உள்ள சிறிய வரப்பு பாதை,3 சிறு வடிகால் வாய்க்கால்களையும் கடந்து சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த பருவமழையின் போது வேம்படி கிராமம் மற்றும் தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் மெய்யநாதன் சம்பவ இடத்துக்கு அதிகாரிகளுடன் வந்து கிராமமக்களுக்கு உதவிகளை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது கிராம மக்கள் சார்பில் வேம்படி கிராமத்திலிருந்து தெற்கு தெருவுக்கு சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

பூமி பூஜை

கிராம மக்களின் பல வருட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக சாலை அமைக்கப்படும் என்று கிராமமக்களிடம் உத்தரவாதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து வேம்படி கிராமத்திலிருந்து தெற்கு தெருவுக்கு புதியதாக சாலை அமைக்க ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமையும் இடத்தில் குறுக்கே உள்ள மூன்று வடிகால் வாய்க்கால்களில் மூன்று பாலங்கள் கட்டவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று வேம்படி கிராமத்திலிருந்து தெற்கு தெருவுக்கு புதியதாக சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இதில் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் கொண்டு சாலை அமைப்பதற்கான பணியை படையல் இட்டு தொடங்கி வைத்தார். ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன், ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி, துணைத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சின்னப்பா, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை இல்லாமல் இருந்த கிராமத்துக்கு புதியதாக சாலை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் மெய்யநாதனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story