ரூ.75 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை


ரூ.75 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை
x
தஞ்சாவூர்

மெலட்டூர்:

அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்யாணசுந்தரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துரூ.75 லட்சத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்்கு அம்மாப்பேட்டை ஒன்றிய குழுதலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். கல்யாணசுந்தரம் எம்.பி, பூமி பூஜை செய்து கட்டுமானபணியை தொடங்கி வைத்தார். இதில் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு துணை தலைவர் தியாகசுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் குமார், பேரூராட்சி தலைவர் ஷோபாரமேஷ், பேரூராட்சி செயல்அலுவலர் ராஜா, அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, உதவி பொறியாளர் கார்த்திக், அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அஜந்தன், வெங்கடேஷ்குமார், மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story