ரூ.1¾ கோடியில் அறிவு சார் நூலகம் அமைக்க பூமி பூஜை


ரூ.1¾ கோடியில் அறிவு சார் நூலகம் அமைக்க பூமி பூஜை
x

ஆரணியில் ரூ.1¾ கோடியில் அறிவு சார் நூலகம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை

ஆரணி நகராட்சி சார்பாக நகராட்சி அலுவலகம் அருகே கலைஞர் நகர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் அறிவு சார் நூலகம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடந்தது. நகரமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனரும், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வக்கீல் எம்.சுந்தர், மோகன், துரை மாமது, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஜெயராணி ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகராட்சி பொறியாளர் டி. ராஜவிஜயகாமராஜ் நன்றி கூறினார்.


Next Story