பயணிகள் நிழலகம் அமைக்க பூமி பூஜை


பயணிகள் நிழலகம் அமைக்க பூமி பூஜை
x

செங்குடியில் பயணிகள் நிழலகம் அமைக்க பூமி பூஜை நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ. 6.32 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் அமைக்க பூமி பூஜை நடந்தது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர் மகாலட்சுமி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் , ஊராட்சி செயலர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story