மேட்டூர் தொகுதியில்ரூ.31½ லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜைசதாசிவம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
மேட்டூர்
மேட்டூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் மேட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.13½ லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவுவாயில் வளைவு அமைக்கப்படுகிறது. மேட்டூர் அரசு ஆஸ்பத்திரி அருகே புதிய ரேஷன் கடை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. அதன்படி ரூ.31½ லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அரசு கலைக்கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜையில், கல்லூரி முதல்வர் ரேணுகாதேவி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ரேஷன் கடை மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில், மேட்டூர் நகர பா.ம.க. செயலாளர் மதியழகன், நகர தலைவர் சந்திரசேகரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பு செயலாளர் அமுதா, இளைஞர் அணி கண்ணன், செல்லப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கூ.பா.கோவிந்தன், மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் இளம்பருதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.