ரூ.69 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை
எர்ரகொல்லனூர் முதல் எட்டியாம்பட்டி வரை ரூ.69 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை செய்து பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி
பென்னாகரம்
பென்னாகரம் பேரூராட்சியில் எர்ரகொல்லனூர் முதல் எட்டியாம்பட்டி வரை நபார்டு நிதிஉதவியுடன் ரூ.69 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுனேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் வீரமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நிரோஷா முரளி, சுமித்ரா சந்தோஷ், சுமதி வெங்கடேஷ், ஜெயக்கொடி பச்சையப்பன், மோசின் கான், பவுன்ராஜ், ரேவதி லட்சுமணன், ஜெயந்தி குணாளன், ஷானு, கமலேசன், பூவரசன் மற்றும் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஒப்பந்ததாரர் ஜெமினி, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story