அங்கன்வாடி மையங்கள் கட்ட பூமி பூஜை


அங்கன்வாடி மையங்கள் கட்ட பூமி பூஜை
x

மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சியில் அங்கன்வாடி மையங்கள் கட்ட பூமி பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி ஒன்றியம் அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட நந்திபுரம் கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம், கெஸ்தூர் கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதேபோன்று மஞ்சுகொண்டப்பள்ளி கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ரவிகுமார், அஞ்செட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், தளி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கிரிஸ், பொருளாளர் முனிராஜ், ஊராட்சி தலைவர்கள் ஜெயராமன், நூரொந்தப்பா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோபி, மூர்த்தி, வெங்கடேஷ், சண்முகம், தளி வடக்கு ஒன்றிய பொருளாளர் முனிராஜ் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story