கபிலர்மலை ஊராட்சியில் பள்ளி வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை!
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, கபிலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் கபிலர்மலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் சக்திவேல், பெரியசாமி, பழனிசாமி, கபிலர்மலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம், கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பராஜன், திரிஷா, உதவி பொறியாளர் மெகப்பூபாஷா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.