ரூ.22¾ லட்சம் திட்ட பணிகளுக்கான பூமிபூஜை


ரூ.22¾ லட்சம் திட்ட பணிகளுக்கான பூமிபூஜை
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாடியூர் அருகே ரூ.22¾ லட்சத்தில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.

திண்டுக்கல்

வடமதுரை ஒன்றியம், பாடியூர் அருகே உள்ள புதுப்பட்டியில் ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வடமதுரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன், முன்னாள் ஊராட்சி செயலாளர் இளங்கோ, நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், கிளை கழக செயலாளர்கள் சுப்பிரமணி, முனியசாமி, அண்ணாத்துரை, ஆறுமுகம், சிவபெருமாள், சின்னையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story