ரூ.7¼ கோடியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை


ரூ.7¼ கோடியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை
x

ஒட்டப்பட்டி ஊராட்சியில் ரூ.7¼ கோடியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஒன்றியம் ஒட்டப்பட்டி ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவசர மருத்துவ தேவைகள் மற்றும் சிகிச்சைக்கு அருகில் உள்ள புதுப்பேட்டைக்கு சென்றுவரும் நிலை இருந்து வருகிறது.

எனவே ஒட்டப்பட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதனையடுத்து தமிழக அரசு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.7 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதைத்தொடர்ந்து புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஒட்டப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் காந்தி தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி வரவேற்றார்.

சிறப்பு அழைப் பாளராக மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றியகட்குழு துணை தலைவர் ஸ்ரீதேவி காந்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

இதில் அரசு டாக்டர் புகழேந்தி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


Next Story