ரூ.24 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமிபூஜை


ரூ.24 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருத்துறைப்பூண்டியில் ரூ.24 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:


'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருத்துறைப்பூண்டியில் ரூ.24 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

ரூ.24 லட்சத்தில்...

திருத்துறைப்பூண்டி- நாகை சாலை பவுண்டடி அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தகர சீட்டுகளால் கட்டப்பட்டு இயங்கி வந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். இங்கு மாணவர்களுக்கு போதிய பாதுகாப்புகள் எதுவும் இல்லை எனவும், அதை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் சில மாதங்களுக்கு முன் அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. செய்தி வெளியிட்ட அன்றைய தினமே திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து அந்த பள்ளியை பார்வையிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி வழங்கப்படும் என்றார். இந்த நிலையில் மேற்கண்ட பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ரூ.24 லட்சத்து 19 ஆயிரம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

பள்ளிக்கு புதிய கட்டிடம்

நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து கலந்து கொண்டு பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், கவுன்சிலர் எழிலரசன், தலைமை ஆசிரியர் வேதரத்தினம், ஆசிரியை சுசீலா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ.வுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story