செங்கோட்டையில் புதிய தினசரி சந்தை கட்டுவதற்கு பூமி பூஜை


செங்கோட்டையில் புதிய தினசரி சந்தை கட்டுவதற்கு பூமி பூஜை
x

செங்கோட்டையில் புதிய தினசரி சந்தை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள வாரச்சந்தை கட்டிடங்கள் கேரள மாநிலத்துடன் செங்கோட்டை இருந்தபோது கட்டப்பட்டது. இந்த கட்டிடங்கள் மிகவும் பழமைவாய்ந்து பராமரிப்பின்றி இருந்து வந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழமையான வாரச்சந்தை கட்டிடங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு ரூ.4 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தினசரி சந்தை கட்டிடங்கள் மற்றும் பம்பு ஹவுஸ் ரோட்டில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்பட்டு புதிய தினசரி சந்தை கட்டிடங்கள் கட்டுவதற்கும், வணிக வளாகங்கள் கட்டுவதற்கும் நேற்று பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ராமலட்சுமி, ஆணையாளர் பார்கவி, பொறியாளர் கண்ணன், நகர தி.மு.க. செயலாளர் ரஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story