திருச்சியில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
திருச்சியில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி
திருச்சி புத்தூரில் `தூய்மையான திருச்சி பசுமையான திருச்சி' என்பதை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பையையும், துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், இந்தியன் கார்ப்பரேசன் அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள். கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story