அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ -மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ -மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
x

அண்ணா பிறந்தநாளையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் நாளை சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

ராணிப்பேட்டை

அண்ணா பிறந்தநாளையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் நாளை சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

சைக்கிள் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அண்ணா சைக்கிள் போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

இப் போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுடைய சொந்த சைக்கிளுடன் கலந்து கொள்ளலாம்.

13 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் போட்டிக்கான தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூ.5 ஆயிரம், ‌ ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத் தொகையும், தகுதி சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பதிவு செய்ய வேண்டும்

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டி நடைபெறும் அன்று நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது. பங்கேற்பவர்கள் தங்களின் பெயர்களை போட்டி நடைபெறும் அன்று காலை 6 மணிக்குள் போட்டி ெதாடங்கும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

போட்டிகள் ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, ஆன்சிலரி பெல்ட் ரூட், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், அக்ராவரம் வழியாகச் சென்று தேசிய நெடுஞ்சாலை பெல் நிறுவனம் வரையும் சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரும்பி வரும் வகையில் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தை 0416-2221721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.


Next Story