பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
x

நாமக்கல்லில் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.

நாமக்கல்

சைக்கிள் போட்டி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீட்டர் தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டர் தொலைவும் போட்டி நடைபெறும். 1.1.2010 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் தொலைவும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் தொலைவும் போட்டி நடைபெறும். 1.1.2008 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் மற்றும் மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெற உள்ளது.

வயது சான்றிதழ்

இப்போட்டியில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும். மாணவ, மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். 2 பிரேக்குகளுடன் கூடிய சாதாரண கைப்பிடி கொண்ட மிதிவண்டியாக இருக்க வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிள்களை பயன்படுத்துதல் கூடாது.

சைக்கிள் போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்கு பெறும் மாணவ, மாணவிகளே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். தாமதமாக வரும் மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் தொலை தூர மாணவ-மாணவிகள் 14-ந் தேதி மாலை முதல் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தங்கிக் கொள்ளலாம்.

பரிசு விவரம்

போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பதிவுகளை dsonmk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 7401703492 மற்றும் 9566813691 என்கிற அலைபேசி எண்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். போட்டி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வரை நேரடி பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசு காசோலையாகவும் மற்றும் முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story