மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்


மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
x

அ.மல்லாபுரத்தில் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை செந்தில்குமார் எம்.பி. வழங்கினார்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அருகே அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி. கலந்து கொண்டு 115 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம், அரசு குற்றவியல் வக்கீல் பி.கே.முருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்சா லட்சுமணன், கிளை செயலாளர் முருகன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story