பிடாரி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா


பிடாரி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா
x

திருவெண்காடு பிடாரி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காட்டில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்கிட கொடியேற்றப்பட்டது. இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story