திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார் பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார்


திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார் பீகார் முதல் மந்திரி  நிதீஷ் குமார்
x

பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் பெயரின் நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. ஒரு முழு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் வருகிறார்.


Next Story