இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2023 1:00 AM IST (Updated: 12 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

அன்னதானப்பட்டி:-

சேலம் தாதகாப்பட்டி செல்லக்குட்டிக்காடு முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிபூபதி (வயது 26). ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மணிபூபதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூணாங்கரட்டைச் சேர்ந்த நண்பர்களான மணிகண்டன், தினேஷ் ஆகியோருடன் விளையாட்டுக்காக செல்போனில் பெண் குரலில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கு அனுப்பி விட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு மணிபூபதி மற்றும் அவரது நண்பர்கள் முத்து மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு வந்த சிலர் அவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த இரு தரப்பினரும் தனித்தனியாக அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், மூணாங்கரடு பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் (23), சவுந்தர் (29) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த சக்திவேல் (27), விஜயகுமார் (27), ஸ்ரீவசந்த் (24) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பு மோதலில் படுகாயமடைந்த தினேஷ்குமார், சதீஷ், மணிபூபதி ஆகிய 3 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story