இருதரப்பினர் மோதல்; 5 பேர் காயம்
களக்காடு அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூரை சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிகண்டன் (26). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் அய்யப்பன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன், அவரது உறவினர் வெங்கடேஷ் ஆகியோர் பொத்தை சுத்தி கோவிலுக்கு சென்று விட்டு, மேலதேவநல்லூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யப்பன் தரப்பினருக்கும், மணிகண்டன் தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பாட்டில்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் மணிகண்டன், வெங்கடேஷ், வேல்முருகன், இசக்கிமுத்து, அய்யப்பன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.