இருதரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்கு
கமுதியில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 12 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்
கமுதி,
கமுதி அடுத்த சேதுராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது 37). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (47) தரப்பினருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பான இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் குணசேகரன், கோட்டைச்சாமி, மற்றும் ராமலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கமுதி போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story