இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
x

இருதரப்பினர் மோதல் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கணபதியின் மனைவி சரோஜா(வயது 60). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் மனைவி கோமதிக்கும் நிலப்பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வயலில் சரோஜா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோமதி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து சரோஜா, அவரது மகன் செல்வராஜ்(41), உறவினர் சிவா (25) ஆகியோரும், கோமதி, பாக்கியராஜ்(40) ஆகியோரும் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சரோஜா, கோமதி ஆகியோர் பலத்த காயமடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இருதரப்பினரும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சரோஜா, செல்வராஜ், சிவா மற்றும் கோமதி, பாக்கியராஜ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story