இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
x

இருதரப்பினர் மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கண்டியங்கொல்லை புதுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் அருமைதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே சம்பவத்தன்று ஏற்பட்ட திடீர் வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, உருட்டு கட்டைகளால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி மற்றும் அருமைதுரையின் மனைவி துர்காதேவி ஆகியோர் தா.பழூர் போலீசில் புகார் அளித்தனர். இதில் பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில் அருமைதுரை மற்றும் அவரது மனைவி துர்காதேவி ஆகியோர் மீதும், துர்காதேவி கொடுத்த புகாரின்பேரில் பழனிச்சாமி, அவரது மனைவி ராணி, பழனிச்சாமியின் சகோதரர் சரவணன் ஆகியோர் மீதும் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story