கிராம சபை கூட்டத்தில் இருதரப்பினர் மோதல் -5 பேர் மீது வழக்கு
கிராம சபை கூட்டத்தில் இருதரப்பினர் மோதலில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கே.உன்னிபட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாரதாதேவி செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தின் போது குடிநீர் சம்பந்தப்பட்ட புகார் எழுந்தது. அதற்கு தேவையான விளக்கங்களை ஊராட்சி மன்ற தலைவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரா.ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தரப்பை சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சாரதாதேவி செந்தில்குமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் இரா.ரவிச்சந்திரன், நந்தகுமார், ஆனந்தகுமார், அருண்குமார், அன்பரசன் ஆகிய ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
=========