ரூ.18½ லட்சம் உண்டியல் காணிக்கை


ரூ.18½ லட்சம் உண்டியல் காணிக்கை
x

மடப்புரத்திம் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே மடப்புரத்தில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். மேலும் தமிழ், ஆங்கில வருட பிறப்புகள், ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அது சமயம் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

இந்நிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை உதவிய ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மடப்புரம் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் கண்காணிப்பாளர் வசந்தா, ஆய்வாளர் அய்யனார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், சண்முகவேலு மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்டியலில் ரொக்கமாக ரூ.18 லட்சத்து 54 ஆயிரத்து 503-ம், தங்கம் 163 கிராம், வெள்ளி 76 கிராமும் இருந்தது.



Next Story