சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ.3½ லட்சம் உண்டியல் காணிக்கை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ.3½ லட்சம் உண்டியல் காணிக்கை இருந்தது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் சபரீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியலில் இருந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் உண்டியல்களில் மொத்தம் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 45 மற்றும் சில்லரை காசுகள் இருந்தது. மேலும் 23 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளி பொருட்கள் உண்டியலில் இருந்தது. இவை அனைத்தும் முறையாக கணக்கு வைக்கப்பட்டு கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.