மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள்


மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள்
x

மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

வாலாஜா பஸ் நிலையம் அருகில் உள்ள நெடுஞ்சாலை ஓரம் மின் கம்பங்கள் அதிகமாக உள்ளன. இந்த மின் கம்பங்களில் கீழிருந்து மேலாக தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பர பலகைகள், தட்டிகளை கட்டி வைத்துள்ளனர். மின் கம்பங்களில் பழுது எதுவும் ஏற்பட்டால், ஊழியர்கள் மேலே ஏறி வேலை செய்வது கடினமாக இருக்கும். எனவே மின் கம்பங்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story