திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் உண்டியல் திறப்பு ரூ.15 லட்சம் காணிக்கை வசூல்


திருவரங்கம்  ரங்கநாதர் கோவிலில் உண்டியல் திறப்பு  ரூ.15 லட்சம் காணிக்கை வசூல்
x

திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.15 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே திருவரங்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மூலம் அதில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில் 15 லட்சத்து 41 ஆயிரத்து 762 ரூபாயும், 160 கிராம் தங்க நகைகளும், 50 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியின்போது மணலூர்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story