மக்கும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முகாம்


மக்கும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முகாம்
x

விருதுநகர் நகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முகாம் ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.

விருதுநகர்


விருதுநகர் நகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முகாம் ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.

விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் நகராட்சி சார்பாக தலைவர் மாதவன் தலைமையில் ஆணையாளர் (பொறுப்பு) மணி முன்னிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளை பொதுமக்கள் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடைபெற்றது. இந்நகர் தேசபந்து மைதானம் முன்பு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளான தெர்மாகோல், பழைய துணி, பழைய பொம்மை, உபயோகப்படுத்தாத டி.வி. மானிட்டர் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் குளங்களில் போடுவதால் அதிலிருந்து கொசு உற்பத்தி பெருகி மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் நேரடியாக கொண்டு வந்து கொடுக்கலாம்.

மறு சுழற்சி

மேலும் பொதுமக்கள் கொடுக்கக்கூடிய பொருட்களை நகராட்சி நிர்வாகம் சார்பாக மறு சுழற்சி செய்து அந்த பொருட்களை மீண்டும் பொது மக்களுக்கு வழங்கப்படும். இந்த முகாம் ஜூன் 5-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள், துப்புரவு மற்றும் களப்பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


Related Tags :
Next Story