நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடலூர்


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கடலூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய்யும்போது, பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன், விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்யமுடியும்.

விரல் ரேகை பதிவு

பயோ மெட்ரிக் கருவி பொருத்தி, விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி பெறுவதன் மூலமும் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம், விவசாயிகளின் சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என கொள்முதல் நிலையங்களிலேயே சரிபார்த்துக் கொண்டு, நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story