வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு
திருப்பத்தூரில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
திருப்பத்தூர்
தமிழ்நாடு வனத்துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் பெரிய ஏரி, சமணபுதூர் ஏரி, குரும்பேரி, மடவாளம் ஏரி, ஏலகிரி மலையில் உள்ள ஏரி ஆகிய பகுதிகளில் 2 நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் நீர் காகம், அறிவாள் மூக்கன் என 18 வகையான பறவைகள் இருப்பது தெரியவந்தது.
இப்பணிகளில் வனச்சரக அலுவலர் பிரபு தலைமையில் வனத்துறையினர், களப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story