பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது
ஒரத்தநாடு அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சிற்றம்பலம்;
ஒரத்தநாடு அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பறவைகள் வேட்டை
திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக பகுதிக்கு உட்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் பறவைகளை வேட்டையாடுபவர்களை பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பட்டுக்கோட்டை வனச்சரகர் குமார் தலைமையில் நேற்று இந்த சிறப்பு குழுவினர் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு கிராம வயல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கைது
அப்போது மடையான் மற்றும் கொக்கு உள்ளிட்ட பறவை இனங்களை வலை வைத்து பிடித்துக் கொண்டிருந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள் ஒரத்தநாடு அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), விஜி (20) என தெரிய வந்தது. கைதான 2 பேர் மீதும், வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 பறவைகளை உயிருடன் பறிமுதல் செய்து வனத்துறையினர் பறக்க விட்டனர்.