தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த பீர்க்கங்காய்


தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த பீர்க்கங்காய்
x

தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த பீர்க்கங்காய்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று பீர்க்கங்காய் வரத்து அதிக அளவில் இருந்தது. இதன் காரணமாக விலை சற்று குறைவாக இருந்தது.

வரத்து அதிகரிப்பு

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட் மாநகரின் பிரதான மார்க்கெட்டாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்களையொட்டி கடந்த சில தினங்களாக இந்த மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஓணம் பண்டிகை முடிந்த நிலையில் காய்கறிகளின் விலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று மார்க்கெட்டிற்கு பீர்க்கங்காயின் வரத்து அதிகமாக இருந்தது. அவினாசி, பல்லடம், கொடுவாய், மங்கலம் உள்பட திருப்பூரின் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 10 டன் பீர்க்கங்காய் வரத்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சுமார் 13 கிலோ எடை கொண்ட பீர்க்கங்காய் கட்டு கடந்த சில தினங்களாக ரூ.400 முதல் அதிகபட்சம் ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மொத்த விற்பனை விலையில் ரூ.300 முதல் ரூ.500 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

விலை சரிவு

விலை குறைவாக இருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் பீர்க்கங்காயை அதிக அளவில் வாங்கி சென்றனர். இதேபோல், கடந்த சில தினங்களாக சுமார் 15 கிலோ எடை கொண்ட ஒரு கட்டு சுரைக்காய் அதிகபட்சமாக ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. சுமார் 20 கிலோ எடை கொண்ட ஒரு கட்டு பாகற்காய் ரூ.500 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் சில காய்கறிகள் தரத்திற்கு தகுந்தவாறு விலை அதிகமாக இருந்தது. ===========


Next Story